#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா... இவ்வளவா... வாரிசு படத்தில் விஜய் பயன்படுத்தும் பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா.?
தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படம் விஜய் படங்களிலிருந்து சற்று மாறுபட்டு வித்யாசமாக படமாக உருவாவதாகவும், இப்படத்தில் வழக்கத்திற்கு மாறான விஜய்யை பார்க்கலாம் எனவும் பல தகவல் வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய தகவலாக வாரிசு படத்தில் விஜய் பயன்படுத்தும் பைக்கின் விலை வெளியாகியுள்ளது. அதாவது இந்த பைக்கின் குறைந்தபட்ச விலை 2 .5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.