#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தை பின்பற்றுகிறாரா விஜய்? வைரலாகும் புகைப்பட்டதால் எழுந்த சந்தேகம்!
தமிழில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் படம் வெளியாக போகிறது என்றால் சமூக வலைத்தளங்கள் பிஸியாகிவிடும், மேலும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.
விஸ்வாசம் படத்தை அடுத்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் தல அஜித். சர்க்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடிக்கிறார் விஜய். விஜய்யின் அடுத்தபடம் விளையாட்டு சம்மந்தமானது என்றும் படத்தில் கால்பந்த்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.
பொதுவாக அஜித் தற்போது நடித்துவரும் படங்களில் மேக்கப் இல்லாமல் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டெயிலில் நடித்துவருகிறார். தற்போது நடிகர் அஜித்தை தொடர்ந்து விஜய்யும் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டெயில் களமிறங்கியுள்ளார்.
சமீபத்தில் துணை இயக்குனர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் விஜய். அந்த திருமண நிகழ்ச்சியில் தளபதி 63 படத்தின் கெட்டப்பில், சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டெயிலில் விஜய் வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.