மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியின் 50வது படம்.! ரிலீஸ் எப்போ?? வெளிவந்த சூப்பரான அறிவிப்பு!!
தமிழ் சினிமாவின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அசத்தலாக நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் விஜய் சேதுபதி. ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா.
மகாராஜாவில் இணைந்த நட்சத்திரங்கள்
விஜய் சேதுபதியின் 50வது படமான இதனை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் ஏஎல் தேனப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 51வது படம்.! ரசிகர்களை கவர்ந்த டைட்டில் டீசர்.! இதோ..
ரிலீஸ் தேதி அறிவிப்பு
மகாராஜா படத்திற்கு அஜனீஷ் பி. லோகநாதன் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகஉள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் இதனை பெருமளவில் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: கங்குவா ரிலீஸ் எப்போ?? சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன முக்கிய பிரபலம்!!