பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திருமண விருந்தில் நடிகர் விஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் அந்த குழந்தை யார் தெரியுமா? வைரலாகும் அரிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தளபதியாக வலம் வருபவர் விஜய். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்களை, விஜய்யின் பிறந்தநாள் போன்றவற்றை அவர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர்
வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் அவரது ரசிகர்கள் விஜய் குறித்த எந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தாலும் அதனை இணையத்தில் பெருமளவில் வைரலாக்குவர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சிறு வயதில் தனது அம்மா ஷோபாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் மடியில் குழந்தை ஒன்று அமர்ந்துள்ளது. அந்த குழந்தை யார் என்று அனைவரிடமும் கேள்வி எழுந்தது. அது வேறு யாருமல்ல, தளபதி விஜய்யின் சித்தி மகனும், பிரபல நடிகருமான விக்ராந்த். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.