மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"காலம் இப்படி பண்ணிடுச்சு..." தல அஜித்துடன் மறைந்த மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை.!
உதவி இயக்குனர் மற்றும் நடிகர் என பல பரிணாமங்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்த குணச்சித்திர நடிகர் மாரிமுத்து இன்று காலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை சொந்த ஊரில் வைத்து நடைபெற இருக்கிறது.
90-களில் உதவி இயக்குனராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய மாரிமுத்து வசந்த், எஸ்ஜே சூர்யா, மணிரத்தினம், சீமான் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இவர் அஜித் குமார் உடன் ஆசை மற்றும் வாலி ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டங்களில் தனக்கும் அஜித் குமாருக்குமான நட்பு பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
மேலும் அஜித்துடன் தன்னுடைய நட்பு தொடர்வதாகவும் சமீபகாலமாகத்தான் அவரை சந்தித்து பேச முடியவில்லை என்றும் தெரிவித்து அவர் அஜித்துடன் அடுத்த படத்தில் இணைய இருக்கிறேன் அவரிடம் நிறைய பேச வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது இவர் மரணம் அடைந்து விட்டதால் அஜித்துடன் பேச வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாத ஆசையாகிவிட்டது.
அந்தப் பேட்டியில் அஜித் பற்றி கூறியிருந்த மாரிமுத்து" அஜித் மிகவும் சிம்பிளான மனிதர் எந்த முடிவு என்றாலும் உடனே எடுத்து விடுவார். அவருக்கு முன் கோபம் அதிகம் என தெரிவித்தார். மேலும் தான் பார்த்த நடிகர்களிலேயே அதிக உதவி செய்வது அஜித் தான் என்றும் தனது மகனுக்கு எட்டு வருடங்கள் ஸ்கூல் பீஸ் கட்டியதாகவும் தெரிவித்தார். ஆசைப்பட சூட்டிங்கில் அஜித் குமாரை தன்னுடைய பைக்கில் வைத்து அழைத்துச் சென்றதாகவும் அஜித்குமாரும் இவரை தன்னுடைய பைக்கில் வைத்து ஊர் சுற்றியதாகவும் பகிர்ந்து கொண்டார்.