மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் நடித்த படங்களிலையே நடிகர் விஜய்க்கு பிடித்த படம் இதுதானாம்! நெருங்கிய நண்பர் பேட்டி!
தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய துருவங்கள் என்றால் அது தல மற்றும் தளபதிதான். தளபதி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்க்கார் திரைப்படம். இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்துவருகிறார் தல அஜித். இந்த படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் தல படம் வெளிவரும்போது தளபதி ரசிகர்கள் அதை கலாய்ப்பதும், தளபதி படம் வெளிவரும்போது தல ரசிகர்கள் அதை கலாய்ப்பதும் வழக்கமாக இருந்துவருகிறது. ரசிகர்கள்தான் இப்படி என்றால் மற்றவரின் படம் வெளியாகும்போது தல மற்றும் தளபதி ரியாக்சன் எப்படி இருக்கும்?
தல மற்றும் தளபதி இருவருமே நல்ல நண்பர்கள்தான். இந்நிலையில் தளபதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ். தளபதி விஜயுடன் ஒருசில படங்களில் நடித்துள்ளார், மேலும் பல்வேறு டிவி தொடர்களிலும் நடித்துள்ளார் சஞ்சீவ்.
தனியார் வெப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் சஞ்சீவிடம் அஜித் நடித்த படங்களில் விஜய்க்கு பிடித்த படம் எனது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளில் சஞ்சீவ் அஜித் நடித்த படங்ளில் விஜய்க்கு பிடித்த படம் வேதாளமாம். வேதாளம் படம் நன்றாக உள்ளதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் தளபதி விஜய்.