மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் யார்.? டாஸ்க்கில் வெற்றி பெறுவாரா கூல் சுரேஷ்.?
பிக்பாஸ் சீசன் 7 தற்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமானது. இந்த சீசனில் எப்போதும் போல இல்லாமல் 2 நாமினேஷன்கள்,2 வீடுகள் என புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில், 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் வாரத்தில், அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். அதன் பின் 2 நாட்களில் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில், பவா செல்லதுரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஆகவே, 2வது வாரத்தில் எலிமினேஷன் பிராசஸ் நடைபெறவில்லை. சென்ற வாரம் இந்த சீசனின் தொடக்கத்தில் வீட்டின் தலைவராக இருந்த விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தான், கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி வைல்ட் கார்டு என்ட்ரியாக ஆர்.ஜே. பிராவோ, அன்னபாரதி, கானாபாலா, வி.ஜே. அர்ச்சனா, நடிகர் தினேஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். ஆனாலும், இவர்கள் 5 பேரும் தற்போது ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கிறார்கள்.
இதற்கு நடுவே தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்ததால், வீட்டிலுள்ள பெரும்பான்மையான நபர்கள் கூல் சுரேஷ் தான் வீட்டின் அடுத்த தலைவர் என தெரிவிக்கிறார்கள். இதன்பின் கல் போல அமைக்கப்பட்டுள்ள ஒரு மேட்டில், ஒரே காலில் நிற்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்படுகின்றது.
அந்த கல் மீது அதிக நேரம் யார் ஒற்றை காலில் நிற்கிறார்களோ அவர்கள்தான் வீட்டின் இந்த வார தலைவர் என கூறுகின்றார் பிக்பாஸ் பின்னர் வீட்டில் உள்ள எல்லோரும் இந்த டாஸ்க்கில் களமிறங்குகிறார்கள். கூல்சுரேஷ் தான் அதிக நேரம் ஒற்றை காலில் நிற்பதாக காட்டுகிறார்கள் இத்துடன் அந்த ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.