அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
கடுமையான மலச்சிக்கலையும் எளிதில் சரி செய்யும் அத்திப்பழம்.!
அத்திப்பழத்தில் புரோட்டின், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பிரஸ், இரும்புசத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், பிற பழங்களை விட 4 மடங்கு அதிக சத்துக்களை கொண்டதாகவும் அத்திப்பழம் உள்ளது. இதனைப்போல, வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்தும் உள்ளன.
நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினை தடுக்க கூடிய ஆண்டி ஆக்சிடண்டுகள் உள்ளது. அத்திப்பழம் சிறந்த மலமிளக்கியாகவும் செய்யப்படுகிறது. உலர்ந்த அத்திப்பழத்தை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, காலையில் எழுந்ததும் பழத்தை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
இவ்வாறாக 10 முதல் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உள்மூலம் மற்றும் வெளிமூலம், உடல் தள்ளுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். அத்தி மரத்தை கீறினால் லேசான பால் வடியும். இது துவர்ப்புடன் இருக்கும். அடிமரத்தை கீழ் வேர் பகுதியில் சிறிதாக சீவிவிட்டு, அதன் வழியே வரும் பாலினை தினமும் 300 மில்லி அளவு வெறும் வயிறுடன் குடித்து வந்தால், நீரிழிவு நோய் குணமாகும்.
அத்திமரத்தின் பட்டை, பிஞ்சு மற்றும் காய் போன்றவை சதை மற்றும் நரம்பு சுருக்கத்தை சரி செய்கிறது. சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரழிவு பிரச்சனை, தாகம், நாவறட்சி, உடல் வெப்பம் போன்றவற்றை சரி செய்யும். இரத்த சுத்தமாகி, மூட்டு வீக்கம் மற்றும் நீரிழவு பிரச்சனையால் ஏற்படும் புண்கள் குணமாகும்.