பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
பிரிட்ஜ் இல்லாமலேயே வீடுகளில் குளுகுளு நீர் வேண்டுமா?.. இந்த டெக்னீகை செய்து பாருங்கள்.!
இன்றுள்ள இளம்தலைமுறை மறந்த ஆரோக்கியமான விஷயங்களில் ஒன்று மண்பானை நீர் குடிப்பது. அன்றைய காலங்களில் மண்பானை நீர் குடித்து அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் எவ்வித உடல் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். தற்போதைய காலகட்டத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதால், பலரும் அந்த நீரை குடித்து வருகிறார்கள்.
மண்பானை தண்ணீர் குடிப்பது நமக்கு புதிதானது இல்லை என்றாலும் அதனை நாம் கட்டாயம் உபயோகம் செய்யும் பட்சத்தில் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மண்பானையில் இருக்கும் நீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்கும். மண்பானையில் இருக்கும் சிறுதுளை வழியாக தண்ணீர் கசிந்து வெளியேறும் போது பானையில் வெப்பம் ஏற்படாமல் பாதுகாக்கப்படும்.
பிளாஸ்டிக், சில்வர் போன்ற பாத்திரத்தில் வைக்கும் போது அவை இயற்கையாகவே மதிய வெயில் நேரங்களில் சூடாகும் தன்மை கொண்டவை. வெளியில் சென்று வந்தபின் மண்பானை நீர் குடித்தால் அமிர்தம் போல இருக்கும். மண்பானையில் இயற்கை முறையில் நீர் குளிர்விக்கப்படுகிறது. மண்பானை உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது.
களிமண் காரத்தன்மை கொண்டது என்பதால் தண்ணீரை சமநிலைப்படுத்தப்படுகிறது. மண்பானையில் இருக்கும் இயற்கை தாதுக்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் கண்ணெரிச்சல், வாய் புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையையும் நீக்க உதவி செய்கிறது.