மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் நாப்கினால் இவ்வளவு பேராபத்தா?.. உயிரைப்பறிக்கும் நோய்களின் அபாயம்..!!
இந்திய நாட்டில் உள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகம் செய்யும் நாப்கினில் இதயம் தொடர்பான குறைபாடுகள், சர்க்கரை நோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் கொண்ட ரசாயனங்கள் நிறைந்துள்ளன என ஆய்வில் பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக டாக்சிகள் லிங்க் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆயில், 10 மாதிரிகளில் ரசாயனங்கள் நிறைந்துள்ளன அம்பலமாகின. ஆய்வில் 6 கனிமமற்ற 4 கனிமங்கள் கொண்ட நாப்கின்கள் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் உள்ள ரசாயனங்கள் நலமில்லாத சுரப்பிகளை சீரற்றுப்போகச்செய்தல், இதயம், இனப்பெருக்க செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்துதல், புற்றுநோய்கள், பிறவிக்குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
அதேபோல Voc ரசாயனங்கள் மூளைக்குறைபாடு, உடல் உறுப்புக்கள் செயலிழப்பு, இனப்பெருக்க செயல்பாடுகள் மந்தமாதல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இயற்கையான நாப்கின் என்று விளம்பரப்படுத்தப்படும் நாப்கினிலும் Voc ரஷ்யங்கள் நிறைந்துள்ளன.
இதனால் ஆர்கானிக் பேட் என்று கூறப்படும் நாப்கினின் மீதான நம்பிக்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. மாதவிடாய் காலத்தில் நாப்கினுக்கு பதில் மென்சுரல் கப், டேம்பான், துணியால் உள்ள நாப்கின் போன்றவை பயன்படுத்தினால் ரசாயன பாதிப்புகள் குறைவு.