மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த குழந்தையை குளிப்பாட்டும்போது தப்பித்தவறியும் இந்த தவறை செஞ்சிடாதீங்க.! உஷாரா இருங்க..!!
இன்றளவில் இருக்கும் இளம் பெற்றோருக்கு குழந்தைகளை குளிக்க வைக்கும் முறைகள் தொடர்பாக பெருமளவில் தெரிவதில்லை.
அன்றைய காலங்களில் தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது என்றால் அந்த வீட்டில் இருக்கும் மூதாட்டி குழந்தையை பராமரிக்கும் முறை தொடர்பாக தான் செய்து காட்டி பெற்றோருக்கு தெரிவிப்பார்.
தற்போதுள்ள நிலையில் அவைகளுக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. இவ்வாறான பெற்றோர்களுக்கான சில முக்கிய விஷயங்கள் குறித்த ஆலோசனை தேவைப்படுகிறது.
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது பூவை கையாள்வது போன்றது. தவறாக குளிப்பாட்டினால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குழந்தை பால் குடித்தவுடன் எப்போதும் குளிக்க வைக்க கூடாது.
அதேபோல குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்பு அல்லது குளிக்க வைத்த சிறிய நேரம் பின்பு பால் கொடுப்பது நல்லது. சிலர் கடலை மாவு, பயத்த மாவு பயன்படுத்துவார்கள்.
அவை மீது உங்களுக்கு விருப்பமில்லாத பட்சத்தில் குறைந்த அளவிலான வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பேபி சோப்புகளை பயன்படுத்தலாம்.
அதே போல காது மற்றும் மூக்கு பகுதிகளில் ஊதக் கூடாது. சிறிதளவு எண்ணெய் பூசி குழந்தைகளை குளிக்க வைக்கலாம். வாரம் இரண்டு முறை தலைக்கு குளிப்பாட்டினால் போதும். ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றை உபயோகம் செய்யக்கூடாது.
தண்ணீர் அதிக சூடுடன் அல்லது குளிர்ந்த நிலையில் இருக்கக் கூடாது. மிதமான இளம் சூட்டில் குளிக்க வைக்க வேண்டும். குளிக்க வைத்த பின்னர் மிருதுவான துணியை பயன்படுத்தி சுத்தமாக நீரை துடைத்து எடுத்து விட வேண்டும்.
அதேபோல ஈரத்தோடு இருக்கும்போது விரல் நகங்களை எளிதில் வெட்டி அகற்றலாம். குளித்த பின்னர் அதிகளவு பவுடர் போடுவது கூடாது. குளிர்காலத்தில் அடிக்கடி குளிக்க வைக்க வேண்டாம். குழந்தை உடுத்தும் உடை அந்தந்த பருவத்திற்கு ஏற்ப இருப்பது நல்லது.