மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே... வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
இளநீர் கோடை காலத்தில் அருந்துவதற்கு சிறந்த பானமாகும். இது உடலில் சூட்டை தணிப்பதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இளநீரில் கார்போஹைட்ரேட் மக்னீசியம் பொட்டாசியம் வைட்டமின் சி மற்றும் சோடியம் ஆகிய மினரல்கள் நிறைந்திருக்கின்றன . இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இளநீரில் உள்ள பன்புகள், உடலில் அமில ரிஃப்ளக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால், வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு அகியவை ஏற்படாமல் தவிர்க்கலாம். இளநீரில் அயர்ன் சத்துகள், கால்சியம் மற்றும் மாக்னீசிய சத்துகள் நிரம்பியிருக்கின்றன. இது, உடலில் உள்ள பி.ஹெச் அளவையும் அதிகரிக்க உதவும்.
மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தலைவலிக்கும். தூக்க கலக்கமாக இருக்கும். இதனை தவிர்க்க, காலையில் இளநீர் குடிக்கலாம். இதனால் தூக்க கலக்கம் நீங்கும். தலைவலி நீங்கும.
வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். உடலில் உருவாகும் ஒரு சில அமில சுரப்பிகள் காரணமாக சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீர் மூலம் உருவாகும் ஒரு சில கெமிக்கல் மூலமாகவும் இந்த கற்கள் உருவகலாம். சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்றாலோ, உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலோ சிறுநீரக கற்கள் உருவாகும். இதை தவிர்க்க, காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கலாம்.