மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்களை வாட்டி வதைக்கும் PMS பிரச்சனை.. உணவு, வாழ்க்கைமுறையில் கவனம் தேவை.!
பெண்களுக்கு ஹார்மோன் ஏற்படுத்தும் உடல் ரீதியான தாக்கம் அதிகளவு இருக்கும். மாதவிடாய் சுழற்சி தொடங்கும் நாட்களில் இருந்து, மாதவிடாய் நிற்கும் வரை 40 வருடங்கள் பெண்கள் பல்வேறு ரீதியான உடல் மாற்றத்தை சந்தித்து வருகின்றனர். இது இயற்கையான ஒன்றாகும்.
ஆனால், 70 % பெண்களுக்கு PMS எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்த பிரச்சனை ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. மாதவிலக்கு முடிந்ததும் தொடரும் முதல் இரண்டு வாரத்தில், பெண்கள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் பாதிப்பில் இருக்கின்றனர்.
இந்த சமயங்களில் பெண்களுக்கு அதிக உற்சாகம் மற்றும் ஆர்வம் ஏற்பட்டு, புதிய ஆக்கபூர்வ சிந்தனை ஏற்படுகிறது. மேலும், குடும்ப உறவுநிலைகளின் சகிப்புத்தன்மையையும் ஏற்படுத்துவார்கள். மாதவிடாய் தொடங்குவதற்கு முன்னதாக உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர்.
இதனால் வயிறு உப்புவது, மார்பகம் அதிக எடையுடன் இருப்பது போன்ற உணர்வு, அஜீரண கோளாறு, பிறப்புறுப்பு வலி, உடல் அசதி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனையும் ஏற்படும். மனரீதியான சிக்கலும் இக்காலகட்டத்தில் ஏற்படும். யாரை கண்டாலும் எரிச்சலுடன் பேசுவது, காரணம் இல்லாமல் அழுவது, வேலையிடத்தில் தேவையில்லாத வாக்குவாதம், தனிமை, பயம் போன்றவை PMS (Pre-Menstrual Syndrome) அறிகுறிகள் ஆகும்.
பசியின்மை, தூக்கமின்மை மற்றும் பிடித்த விஷயங்களில் கூட ஈடுபாடு இல்லாமல் இருப்பது போன்றவையும் சிலருக்கு ஏற்படுகிறது. PMS அறிகுறி மாதவிடாய் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்டு, பின்னர் இரத்த போக்கு ஏற்பட்டு படிப்படியாக குறையலாம். இவை அனைத்து பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.
வயதை பொறுத்து ஒவ்வொரு விஷயத்தின் தன்மை மாறுபடும் என்றாலும், இதற்கு முக்கிய காரணியாக இருப்பது உணவுப்பழக்கம் மற்றும் மாறிவரும் வாழ்க்கைமுறை ஆகும். உணவிலும், வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தினால் நலம்.