கர்ப்ப காலத்தில் கணவருடன் உடலுறவு கொள்ளலாமா?.. தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.. அப்புறம் விபரீதம் ஆகிடும்.!



Pregnant Time Sexual Intercourse Tips Tamil

 

திருமணம் முடிந்த பின்னர் தம்பதிகள் தங்களுக்குள் தாம்பத்திய விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலும்-மனமும் இணையும் உடலுறவு வைத்துக்கொண்டு இன்பமாக இருப்பார்கள். அதன் பலனாக பெண் கருத்தரிக்கும் வாய்ப்பும் ஏற்படும். கரு தரித்த பின்னர் கருவை சுற்றிலும் Amnion என்று அழைக்கப்படும் நீர் நிறைந்து காணப்படும் பனிக்குடம் உண்டாகும். 

தாய் நடப்பது, உட்காருவது, உறங்குவது என ஏற்படும் உடல் அசைவுகளினால் கரு சிதையாமல் இருக்க இயற்கை ஏற்படுத்திய அரண் ஆம்னியான் ஆகும். பெண் கர்ப்பமானது உறுதியானால் தம்பதிகள் தங்களுக்குள்ளான தனிமை உறவை தவிர்ப்பது நல்லது. 3 மாதங்கள் அவர்கள் தாற்காலிகமாக உறவை தவிர்க்கலாம். 

pregnant

பெண் கருத்தரித்த முதல் 3 மாதத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால், கரு ஆரோக்கியத்துடன் உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைத்தல் போன்றவை ஏற்படலாம். மூன்றாம் மாதத்தில் இருந்து ஒன்பதாம் மாதம் வரையில் பாதுகாப்பான, பெண்ணுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் உறவு வைத்துக்கொள்ளலாம்.. 

அதுவே பெண்ணின் முதல் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்திருக்கும் பட்சத்தில், அடுத்த கர்ப்பத்தின் போது கட்டாயம் உடலுறவு கூடாது. கட்டாயம் தம்பதிகள் தங்களுக்குள் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சாலச்சிறந்தது. 

pregnant

கர்ப்பகாலத்தில் தம்பதிகள் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும்போது, பெண்ணுக்கு ஏதுவான நிலையில் கணவர் உடலுறவு கொள்வது, மனைவியின் வயிற்றின் மீது அழுத்தம் கொடுக்காமல் இருப்பது போன்றவை நல்லது. அக்காலத்தில் தனிமையில் முரட்டுதனமாக செயல்பட்டால் பெண்ணின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். 

தாம்பத்தியத்திற்கு முன்பும் பின்பும் தம்பதிகள் தங்களின் உடல் மற்றும் பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வது நல்லது. கர்ப்ப காலத்தில் சுத்தமின்மை கர்ப்பிணியை மட்டுமல்லாது சிசுவையும் பாதிக்கும். அதேபோல் வாய்வழி உறவு அறவே தவிர்த்தல் நல்லது.