பாலை குடித்தாலே இன்சுலின் சுரக்கிறதா.?! சுகர் பேஷண்டுகளுக்கு வரமாகும் பால்.!



Pro insulin cow in America 

சமீப காலமாக உலகம் முழுவதுமே டயாபடிக் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இவர்களுக்கு கொடுக்கப்படும் இன்சுலின் ஊசி எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால் கேள்வி குறிதான். அதற்கு சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தீர்வை கண்டுபிடித்து இருக்கின்றனர்.  சர்க்கரை நோயாளிகள் வெறும் பாலை குடித்தாலே அவர்களுக்கு தேவையான இன்சுலின் கிடைத்துவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

milk

அமெரிக்க நாட்டின் இல்லினாய்ஸ் யுனிவர்சிட்டி மற்றும் யுனிவர்சிடேட் டி சாவோ பாலோ ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு கால்நடை பயோ தொழிற்சாலையை துவங்கினார்கள். அவர்கள் பசுவின் கருவில் இன்சுலின் தேவைக்காக மனித டி.என்.ஏ கோடிங் துணுக்கை கலந்துள்ளனர். இதன் விளைவு, பிறந்த அந்த கன்று வளர்ந்து மாடானது. அந்த பசு மாட்டின் மூலம் கிடைத்த பாலில் Proinsulin இருந்துள்ளது. இது இன்சுலின் உற்பத்திக்கு முந்தைய ப்ரோ ஹார்மோன் நிலையாகும்.  அதிசயம் என்னவென்றால் ஒரு லிட்டர் பாலில் ஒரு கிராம் இன்சுலினை ஒரு மாடு உற்பத்தி செய்யும் என்பதுதான். 

milk

இது பல்லாயிர கணக்கிலான இன்சுலின் அலகுகளுக்கு சமமானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மாட்டு மந்தை முழு நாட்டிற்கும் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்கிறது என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. டைப் 1 டயாபடிக் நோயாளிகளுக்கு எட்டு ஆண்டுகளுக்கு தேவையான இன்சுலினை கொடுக்கும் சக்தி வாய்ந்தது. இந்த ஆய்வு முடிவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று நடைமுறைக்கு கொண்டு வரும் திட்டம் பற்றி அந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்தாலோசித்து வருகின்றனர்.