18 மாதங்களாக 20 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் கூட்டம்; வீடியோ காண்பித்து கொடுமை.!



in Gujarat a 7 man Gang ABused Young Girl

குஜராத் மாநிலத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2023ல் விஷால் சௌதரி என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகி வந்தனர்.

இந்த நட்பு பின்னாளில் நெருங்கிய பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பழக்கத்தை தொடர்ந்து ளம்பெண்ணை ஹோட்டலுக்கு சௌந்தரி சாப்பிட அழைத்துள்ளார். சாப்பிட வந்த பெண்மணி ஓட்டலுக்கு சென்றபோது, இளம்பெண்ணின் மேஜையில் இருந்த உணவுகள் விழுந்தன.

இதற்காக ஆடையை சுத்தம் செய்யம் என பெண்ணை விஷால் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண் ஆடை மாறி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்தார், அதனை பெண்ணிடம் காண்பித்து ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மகளை கொலை செய்து தாய் தற்கொலை.. 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

gujarat

பின் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர், கடந்த 18 மாதமாக இச்செயலை தொடர்ந்து வந்துள்ளார். மேலும், அதனை சௌதரியின் நண்பர்கள் பெண்ணை வீடியோ காண்பித்து மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், இளம்பெண்ணின் வீடியோ வாட்சப் குழுவில் பரவி வைரலாகவே, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். அதனைத்தொடர்ந்து, விஷால் சௌதரி மற்றும் அவரின் 7 நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: சேர்ந்து வாழ மறுத்த கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரிப்பு; மாறுவேடத்தில் வீடுபுகுந்து கள்ளக்காதலன் பகீர் செயல்.!