Thanjavur: "அங்கிள் தின்பண்டம் வாங்கி கொடுக்குறேன் பாப்பா" - 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இருவர் அதிர்ச்சி செயல்.!



in Thanjavur 10 year Old Girl Abused 

சிறுமிக்கு தின்பண்டம் வாங்கி கொடுப்பதாக பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் உள்ள கிராமத்தில், 5ம் வகுப்பு பயின்று வரும் மாணவி வசித்து வருகிறார். 10 வயதாகும் சிறுமி, கடந்த 2 நாட்களாகவே பள்ளியில் சோர்வுடன் காணப்பட்டு வந்தார். 

இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை, சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, இரண்டு பேர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை பற்றி கூறியுள்ளார். 

இதையும் படிங்க: Thanjavur: காதல் மனைவியை 6 மாதத்தில் கழுத்தறுத்து கொன்ற கொடூரம்; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!

உண்மையை புரிந்துகொண்ட ஆசிரியை, பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சிறுமியும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட, அங்கு சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. 

thanjavur

பாலியல் தொல்லை & இருவர் கைது

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்பேரில் ராஜேஷ் (வயது 35), முகிலரசன் (வயது 40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறுமிகளுக்கு நொறுக்குத்தீனி வாங்கி கொடுப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. 

இவர்கள் உள்ளூரில் வசித்து வரும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: தஞ்சாவூர்: 7 மாத கைக்குழந்தை தொடையில் பலூன் சிக்கி மரணம்; பெற்றோர்களே கவனம்.!