குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்குறீங்களா? 21 நாட்களில் ரூ.24 இலட்சம் காலி.. வடமாநில இளைஞர் கைது.!



in Theni Couple Lost 24 Lakh in cyber Scam 

 

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில், மளிகைக்கடை வைத்தது நடத்தி வரும் நபர், தனது மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.24.69 இலட்சம் பணம் சேமித்து வைத்துள்ளார். இந்த பணத்தை வேறொரு வங்கிக்கணக்குக்கு மாற்றிய விவகாரத்தில், பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் குமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

தேவாரத்தில் உள்ள ஏ.ஆர்.டி காலனி பகுதியில் பலசரக்கு கடை வைத்து அந்தாதி வரும் சிவநேசன் (வயது 42), தனது மனைவியின் பெயரில் அடகுக்கடையும் நடத்தி வருகிறார். இருவரும் தங்களுக்கு என தனித்தனி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். தேவாரம் வங்கிக்கிளையில் இருவரும் கணக்கு வைத்துள்ளனர். வங்கிப்பரிவர்த்தனை செயலியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராணிப்பேட்டை: மோட்டோரோலா போன் புக் செய்தவருக்கு டவ் சோப் டெலிவரி.. பிளிப்கார்ட் ஆர்டர் பரிதாபங்கள்..!

Theni

21 நாட்களில் ரூ.24 இலட்சம் அபேஸ்

ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறை வங்கியின் கணக்குகள் சரிபார்க்கப்படும். அப்போது, கடந்த 2024 பிப்.23 முதல் மார்ச் 15 வரையில், சுமார் 21 நாட்களில் ரூ.24,69,600 பணம் மாயமானது. வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது, அவர்களின் கணக்கில் இருந்து 5 வங்கிக்கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுளளதை தெரியவந்தனர். மேலும், தம்பதியின் இரண்டரை வயது மகள், ஸ்மார்ட்போனை பயன்படுத்தியபோது, அவர்கள் மோசடிகள் லிங்கை செயல்படுத்தியதில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. 

Theni

இளைஞர் கூட்டாளிகளுடன் கைது

சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடந்த விசாரணையில், பெங்களூரில் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பீகாரை பூர்வீகமாக கொண்ட அர்ஜுன் குமார் கைது செய்யப்பட்டார். அவரின் நண்பர்கள் நீரஜ், அணில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மோசடி செயல்முறை குறித்து விசாரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஸ்கைப் பயனர்களுக்கு ஷாக் செய்தி வெளியிட்ட மைக்ரோசாப்ட்.. விபரம் உள்ளே.!