#JustIN: வக்பு வாரிய முறைகேடுகளை எதிர்த்த முன்னாள் தலைமைக்காவலர் கொலை? நெல்லை கொலையில் அதிர்ச்சி தகவல்.!



in Tirunelveli Former Cop Killed case

முன்னாள் தலைமை காவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். 

திருநெல்வேலி மாநகர பகுதியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன். இவர் முன்னாள் தலைமை காவலர் ஆவார். தற்போது தனது பகுதியில் உள்ள மசூதியில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை அவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மசூதிக்கு தொழுகைக்குச் சென்று மீண்டும் வெளியே வரும்போது படுகொலை சம்பவம் நடைபெற்றது.

கொலை சம்பவம் தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து ஜாகிர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்னாள் தலைமை காவலர் ஜாகிர் உசேனுக்கும், பக்கத்தில் வசித்து வருபவருக்கும் இடையே நீண்டகால நிலத்தகராறு இருந்தது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: #Breaking: ஓய்வுபெற்ற தலைமைக்காவலர் வெட்டிக்கொலை; நெல்லையில் பதற்றம்.!

tirunelveli

நீதிமன்றத்தில் ஆஜர்

இந்நிலையில், நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில், கார்த்திக் மற்றும் அக்பர் ஷா ஆகியோர் நேரில் சென்று நீதிபதிகள் முன்பு சரண் அடைந்தனர். இவர்களிடம் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன், மாவட்டத்தில் வக்பு வாரிய சொத்துக்களில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்து, அது சார்ந்த நடவடிக்கையில் விசாரணை நடத்த தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என குடும்பத்தினர் குற்றசாட்டு முன்வைக்கின்றனர். மேலும் ,  தென்மண்டல ஐஜி அளவிலான அதிகாரி நேரில் வந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!