#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, மாவடிப்புதூர் பகுதியில் வசித்து வரும் மோகன் (54), களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இப்பள்ளியில் களக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி, எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் உடற்கல்வி ஆசிரியர் மோகன், மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 1095 பேர் சாதிய வன்கொடுமையால் பாதிப்பு.. ரூ.11 கோடி நிவாரணம்.. - இது நெல்லை ரிப்போர்ட்.!
பாலியல் தொல்லை
மாணவிக்கு தனி அறையில் வைத்து மோகன் பாலியல் தொல்லை கொடுக்கவே, அதிர்ச்சியடைந்த மாணவி வெளியே வந்துவிட்டார். பின் வீட்டுக்கு சென்று தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த சிறுமியின் தாய், நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போக்ஸோவில் வழக்குபதிவு செய்த நாங்குநேரி அனைத்து மகளிர் காவல்துறையினர், மோகனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: மெஷின் பெல்ட்டில் சிக்கி 25 வயது இளைஞர் கோர மரணம்; நொடியில் நடந்த சோகம்..!