மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 நாள் போராட்டத்திற்கு பிறகு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து குழந்தை உயிருடன் மீட்பு
ஹரியானா மாநிலம் ஹிஸ்தாரில் கடந்த புதன்கிழமை 60 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் 47 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.
ஹரியானா மாநிலம் ஹிஸ்தாரில் பயன்பாட்டில் இல்லாத 60 அடி ஆழ போர்வெல் ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. இந்த ஆழ்குழாய் கிணற்றில் அதே பகுதியைச் சேரந்த ஒன்றரை வயது நிரம்பிய நதீம் கான் என்ற சிறுவன் கடந்த புதன்கிழமை தவறி விழுந்துவிட்டான்.
இதுகுறித்து தகவலறிந்த இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் ஆழ்குழாய் கிணற்றுக்குள் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சிறுவன் உள்ளே உயிருடன் இருக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது. உடனடியாக சிறுவனுக்கு சுவாச பிரச்சனைகள் எதுவும் ஏற்படக்கூடது என்பதற்காக ஆக்ஸிஜன் வாயு செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகே மீட்பு குழுவினர் சுமார் 70 அடிக்கு பள்ளம் தோண்டினர். பின்னர் சிறுவன் இருந்த இடத்தை அடைந்து சிறுவனை உயிருடன் மீட்டனர். சிறுவனுக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
மருத்துவமனையில் சிறுவன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை மாலை 5 மணியில் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டான். சுமார் 47 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அவனது பெற்றோர் மற்றும் உறவினர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதைப் போன்ற உருக்கமான சம்பவம் தான் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தில் காண்பிக்கப்பட்டது. இந்த ஆழ்துளாய் கிணறுகளால் உண்டாகும் ஆபத்தைப் பற்றி அனைவரும் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளாய் கிணறுகளை சரியாக முறைப்படி மூடப்பட வேண்டும்.