மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது.!
டெல்லியில் 19 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், வேலை காரணமாக டெல்லி காசியாபாத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அதன்படி காசியாபாத்தில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது கண்காணிப்பாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதில், இதில் இளம் பெண் மயக்கமடைந்து கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அஜய் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.