மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பன்றிக்கு வைத்த குறியில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் வசித்து வருபவர் பாலிவேல ராஜூ. இவரது மனைவி நாகலட்சுமி. கூலி வேலை செய்து வரும் இந்த தம்பதியினருக்கு 4 வயதில் தன்யா ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இதில் சிறுமி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.
இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் துப்பாக்கியால் பன்றிகளை சுட்டு வேட்டையாடியுள்ளனர். அப்போதே பன்றிக்கு வைக்க கூறி தவறி துப்பாக்கிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்யா ஸ்ரீ மீது பாய்ந்தது.
துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் வலியால் சிறுமி கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது சிறுமி ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.