நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
அரசு பள்ளி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 53 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!
பஞ்சாப் மாநிலம் சங்குரூர் மாவட்டத்தில் உள்ள கப்தான் நகரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு விடுதி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியில் நேற்று இரவு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் 53 மாணவர்களுக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விடுவிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் விடுதி உணவு பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விசாரணைப்பு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதியில் இருந்து உணவுப் பொருட்களின் மாதிரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் ரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுதியின் உணவு தரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் தெரிவித்திருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.