மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிப் பேருந்தில் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. சக மாணவன் கைது.!
டெல்லியில் பள்ளி பேருந்தில் 6 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகா பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமி படித்து வந்துள்ளார். இதில் பள்ளி முடிந்ததும் வழக்கம் போல் சிறுமி பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி வீட்டிற்கு வந்ததும் சோர்வாக இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமையிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி பேருந்தில் மூத்த மாணவர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக அதிர்ச்சிக்கரும் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் சிறுமியின் பெற்றோர் டெல்லி டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ரோகினி நகர போலீஸ் துணை கமிஷனருக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி மாணவனை போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.