96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பகீர் சம்பவம்... நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமி.! வெளியான பதற வைக்கும் தகவல்.!
உத்திரபிரதேச மாநிலம் சகரன்பூர் காட்டுப்பகுதியில் 9 வயது சிறுமி நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு சகரன்பூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு தாயுடன் வந்திருக்கிறார் . இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியே விளையாட சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தேடி இருக்கின்றனர். இந்நிலையில் சிறுமி இன்று காலை அந்த ஊரின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மயக்கமடைந்த நிலையில் நிர்வாணம் ஆக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக அருகில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி அப்பகுதியில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்திருக்கிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது . இதனைத் தொடர்ந்து கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் 9 வயது சிறுமி நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.