#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்றே மும்பையில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!
பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில், கோவை கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவருடைய சடலம் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்ற கொடூர சம்பவம் நேற்று மும்பை நேரு நகர் பகுதியில் 9 வயது சிறுமிக்கு அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் சடலம் அந்தப் பகுதியில் உள்ள பொது கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை நேரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுமியின் பெற்றோர் குழந்தையை காணவில்லை என கடந்த வியாழக்கிழமை மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன அந்த சிறுமி இறந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறையில் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டார். உடல்கூறு ஆய்வில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இதில் சம்பந்தப்பட்ட குற்றாவாளி ஒருவனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபரின் மீது கொலை, கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தின் முன் கூடி நீதி வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர்.