மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்ம ஆபர்.. யோசிக்காமல் செய்த சிறிய செயலால் திடீரென்று கோடீஸ்வரரான விவசாயி.!
ஷீத்தல் சிங் என்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 1 மகளும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இவருடைய வாரிசுகள் அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், மகன்கள் இருவரும் அயல்நாட்டில் வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தான், அந்த விவசாயி கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக மருந்து வாங்குவதற்கு கடைக்கு சென்றார். அப்போது திடீரென்று அங்குள்ள கிரீன் வியூ பூங்காவிற்கு வெளியே செயல்பட்டு வரும் ஒரு கடையில் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.
பின்னர் அந்த விவசாயி வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து 4 மணி நேரம் சென்ற பின்னர், அந்த விவசாயியை தொடர்பு கொண்ட லாட்டரி கடை உரிமையாளர், அந்த விவசாயிக்கு 2.5 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். எதிர்பாராத இந்த தகவலால் மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்ற அந்த விவசாயி, தன்னுடைய அண்டை வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடி தீர்த்து விட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த விவசாயி, தன்னுடைய வீட்டில் தற்போது அளவற்ற மகிழ்ச்சி நிலவி வருகிறது என்றும், தனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொதுமக்கள் ஏராளமானோர் தன்னுடைய வீட்டிற்கு வந்து செல்வதாகவும் பெருமை தெரிவித்தார். அத்தோடு, இந்த பரிசுத் தொகையை எவ்வாறு செலவு செய்யலாம் என்பது தொடர்பாக தன்னுடைய குடும்பத்தோடு ஆலோசனை செய்து, முடிவெடுக்கயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.