ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்றுவிடும் அழகிய பசு.. செல்லப்பிராணியாக கொண்டாட்டம்.!

வீடுகளில் நாய், பூனை, கிளி போன்றவற்றை பலரும் தங்களின் செல்லப்பிராணியாக வளர்த்து வருவது வழக்கம். ஆனால், அன்றாட வாழ்வில் பழகிப்போன விலங்காக இருக்கும் மாடு, செல்லப்பிராணிகள் வகையில் வருவதில்லை. ஏனெனில் அவை மனிதர்களுடன் தொன்றுதொட்டே இருந்து வருவதால், அவையும் குடும்ப உறுப்பினராகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், மாடுகள் பெரும்பாலும் தொழுவத்தில் இருப்பது இயலானது. மேற்கூறிய நாய், பூனை மற்றும் கிளி போன்றவை வீட்டிற்குள்ளேயே இருக்கும். இந்த நிலையில், ஜோத்பூரை சார்ந்த குடும்பத்தினர், மாட்டை செல்லப்பிராணியாக பாவித்து வீட்டிற்குள்ளேயே வளர்க்கும் நெகிழ்ச்சி செயல் நடந்துள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரை சார்ந்த குடும்பத்தினர் பசு மாட்டினை வளர்த்து வருகின்றனர். இவர்கள் இன்ஸ்டாகிராமில் தங்களது மாடு செய்யும் செல்ல செயல்களை பதிவிட்டு வைரலாகினர். அந்த வகையில், மாட்டின் சுட்டித்தனமும் வைரலானது. மாடு பெட்டில் படுத்து ஓய்வெடுக்கும் வீடியோ முதல், பல அழகிய காணொளிகளும் அந்த பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இவை மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்று வருகிறது.