#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடுக்கிடும் கொலை... உல்லாசத்திற்கு பலியான பச்சிளம் குழந்தை... கொலை செய்தது எப்படி தாய் பகீர் வாக்குமூலம்.!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பச்சிளம் குழந்தை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது .
திருவனந்தபுரத்தின் கடற்கரை பகுதியில் இறந்த பிஞ்சு குழந்தையின் உடல் கை கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியது. இந்த உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அந்தக் குழந்தை அஞ்சுதேங்கு பகுதியைச் சேர்ந்த ஜூலி என்பவரது குழந்தை என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஜூலியின் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தங்களது பாணியில் விசாரணை நடத்தியதில் அவர் குழந்தையை கொன்று கடலில் வீசியதை ஒப்புக்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் வாக்குமூலத்தை காவல்துறையிடம் அளித்திருக்கிறார்.
ஜூலியின் கணவர் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் அவர் இருக்கும் அதே பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். இதன் மூலம் கர்ப்பமான அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஊர்க்காரர்கள் அவதூறு பேசுவார்கள் என கருதிய ஜூலி தனது குழந்தையை மூச்சை அடக்கிக் கொன்று அதன் கை கால்களை உடைத்து வீட்டுக்கு அருகே புதைத்து இருக்கிறார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து உடலை எடுத்து கடலில் வீசியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.