மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பனுடன் இணைந்து மனைவியிடம் செய்யும் காரியமா இது?!: பகீர் தகவலால் அதிர்ந்த காவல் அதிகாரி..!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண். இவரது கணவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணை அவரது கணவர் தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு ஒத்துழைக்காக இளம்பெண்ணை மர்ம உறுப்பில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இந்த கொடுமையை தாங்க முடியாத இளம்பெண் வீட்டிற்கு வெளியே ஓடி வந்து கதறி அழுதுள்ளார். அவருடைய நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தோர், அவரை திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது அவர் ரத்தக் காயங்களுடன் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மர்ம உறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் திருச்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரும், அவரது நண்பரும் இணைந்து பலாத்காரம் செய்தது குறித்து பேசிய இளம்பெண் இது புதிதாக நடக்கவில்லை கடந்த 2 வருடங்களாக நடந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை கூறினார். இதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்.