மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலாத்காரத்தை எதிர்த்து சண்டை போட்ட சிறுமியின் மூக்கை வெட்டிய மர்ம நபர்!: அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
பாலியல் பலாத்காரத்திற்கு உட்படாத சிறுமியை மூக்கை துண்டித்த வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிl பாலியல் பலாத்காரத்தை எதிர்த்து நின்ற சிறுமியின் மூக்கை மர்ம நபர் ஒருவர் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை நடந்ததாக கூறப்படுகிறது.
அன்று அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து அவரது மூக்கை வெட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் சிறுமியின் மூக்கை வெட்டியதோடு நிறுத்தாமல் அவரை கத்தியால் பலமுறை வெட்டியதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் ஓடிவந்த நிலையில், மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் சிறுமியின் நிலையை கண்ட அவரது உறவினர்கள், தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர்.
அங்கே சிறுமிக்கு ஏற்பட்ட ரத்தக் கசிவை கட்டுப்படுத்த முடியாததால் அவரை சிறப்பு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சிறுமையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.