என்னங்கடா இது சோதனை? பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 அபராதம்!



Andhra village say no to wear nighties at morning time

பொதுவாக மது அருந்த கூடாது, குட்கா, பான் பராக் உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று சட்டம் பிறப்பிக்கும் ஊர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். பட்டாசு வெடிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கும் ஊர்கள் கூட நமது நாட்டில் உள்ளது.

ஆனால் முதன் முறையாக பெண்கள் பகலில் நைட்டி அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துளது ஆந்திராவில் உள்ள டோகாலாபல்லி கிராமம். இங்கு பெண்கள் பகல் நேரத்தில் நைட்டி அணிய அனுமதி இல்லை.

இதுவரை எங்கேயும் கேள்விப்பட்ட முடியாதஅ அளவிற்கு ஆந்திர மாநிலத்தின் டோகாலாபல்லி கிராமமக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  இதன்படி, பெண்கள் மாலை 6 மணி முதல் காலை 8 மணி நேரம் மட்டுமே நைட்டி அணிய வேண்டும் என்றும், நைட்டி அணிந்து சாலைகளில் வரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறும் பெண்களுக்கு 2000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும், தடை மீறும் பெண்களை காட்டி குடுப்பவர்களுக்கு 1000 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.