மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலிகாலம்..! பசுவை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரன்; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்.!
ஆந்திராவில் பசுவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி பலாத்காரம் செய்த அடையாளம் தெரியாத நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இன்றைய வளர்ந்து வரும் நவீனகால சூழலில் எந்த அளவிற்கு மற்ற துறைகளில் முன்னேற்றம் இருக்கிறதோ அதே அளவிற்கு பாலியல் வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது. பொதுவாக சிறுமிகள், பெண்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் தினந்தோறும் கேள்விப்படுகிறோம்.
ஆனால் இன்று விலங்குகளை கூட அதுவும் இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவை பலாத்காரம் செய்யும் அளவுக்கு காமவெறியர்கள் பெருகிவிட்டார்கள்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ள கோதாரி சாலையில் கால்நடைப்பண்ணை நடத்தி வருபவர், புஜ்ஜிசாராஜூ. இவர் கடந்த சனிக்கிழமை இரவு பண்ணையில் இரண்டு பசு மற்றும் கன்றை கட்டி வைத்துள்ளார்.
அதிகாலை எழுந்து வந்து பார்த்தபோது இரண்டு பசுக்களில் ஒன்று காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேடி நிலையில் வேறொரு இடத்தில் பசுவானது கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறான உடல்நிலையில் பின்பகுதியில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அவர் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்தபோது அவர் அளித்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அலட்சியமாக எண்ணி போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு வந்த போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர்.