பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
TrendingVideo: எல்லைதாண்டி வந்து வாங்கிக்கட்டி ஓடிய சீன இராணுவம்.. மாஸ் சமப்வம் செய்த இந்திய இராணுவம்.! வைரல் வீடியோ..!
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தவாங் செக்ட்ர் பகுதியில் இந்திய - சீன எல்லையில், சீன இராணுவ வீரர்கள் எல்லைதாண்டி இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த முயற்சி தோல்வியை தழுவியது. அங்கு நிலைகொண்டு இருந்த இந்திய இராணுவத்தினர் அதிரடியாக செயல்பட்டு அவர்களை விரட்டியடித்தனர்.
இந்நிலையில், இந்திய - சீன இராணுவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தங்கள் நாட்டின் எல்லையை கடந்து வந்துள்ள சீன வீரர்கள், இந்திய பகுதியில் இருக்கின்றனர்.
Big Salute To Indian Army! 🇮🇳 pic.twitter.com/OcviGFdTXh
— Dr. Jitendra Nagar (@NagarJitendra) December 13, 2022
அவர்களை தீரத்தோடு எதிர்கொண்ட இந்திய இராணுவத்தினர், தங்களின் கைகளில் இருந்த தடியால் சீன வீரர்களை அடித்து நொறுக்கி விரட்டுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் சீன இராணுவத்தினர் தங்களின் நாட்டு எல்லைக்குள் சுவர் ஏறி குதித்து தப்பி செல்கின்றனர்.
இதனால் உற்சாகமடைந்த இந்திய இராணுவத்தினர் தங்களின் கரகோஷத்தை எழுப்பி வெற்றியை கொண்டாடுகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 200 க்கும் மேற்பட்ட சீன வீரர்களை 20 - 50 இந்திய இராணுவ வீரர்கள் குழுவினர் தலைதெறித்து ஓட வைத்துள்ளனர்.