மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இயற்கை உபாதை கழிக்க சென்ற 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்ற அதே கிராமத்தை சேர்ந்த சரல் யாதவ் என்ற 19 வயது வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி குண்டு கட்டாக தூக்கி சென்று பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பிறகு அந்த இளைஞர் தப்பியோடி தலை மறைவாகிவிட்டார். இதனையடுத்து மயக்கம் தெளிந்த சிறுமி வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளி சரல் யாதவை கைது செய்தனர்.