#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
பட்ஜெட் 2025 : விலை உயரப்போகும் (ம) குறையும் பொருட்கள் இவை தானா.?!

பட்ஜெட் 2025 :
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025 ஆம் வருடத்தின் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டின் படி விலை உயரப் போகும் பொருட்கள் பற்றி பார்க்கலாம்.
விலை குறையும் பொருட்கள்
அடுத்த 5 ஆண்டுகளில் பிரத்தியாக வாய்ப்புகளை ஏற்படுத்துகின்ற வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் 36 உயிர் காக்கும் மருந்துகளின் விலை பட்டியலை வெளியிட்டு அதன் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசல்.! 30 பேர் பலி!!
மேலும் கைத்தறி ஆடைகள், எலக்ட்ரிக் வாகனங்கள், மருத்துவப் பொருட்கள், கைத்தறி ஆடைகள், காலணிகள், தோல் பொருட்கள் மற்றும் புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலை குறைய கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
விலை அதிகரிக்கும் பொருட்கள்
மேலும் ஃபிளாட் பேனல் டிஸ்ப்ளே வரி முன்பு 10 சதவீதமாக இருந்து வந்தது. தற்போது அதன் விகிதம் 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செல்போன், டிவி மற்றும் டேப்லட் போன்ற பொருட்களின் விலை மிகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கிளாஸ் ரூமில் மாணவருடன், பேராசிரியை திருமணம்.! ஆனா நடந்தது இதுதானாம்!! பலே காரணம்..