கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
விபத்தில் கிணற்றுக்குள் விழுந்த பேருந்து மற்றும் ஆட்டோ! அலறல் சத்தம் போட்டபடி பலர் பலி!
ஆட்டோ மீது வேகமாக வந்த பஸ் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தும் ஆட்டோவும் சாலை அருகில் இருந்த கிணற்றில் விழுந்ததால் இதுவரை 9 பேருக்கு மேலானோர் பலியாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலா பகுதியில் பேருந்து ஒன்றும் ஆட்டோ ரிக்ஷாவும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மோதிய வேகத்தில் கிணறு ஒன்றில் பேருந்தும் ஆட்டோவும் ஆழமான கிணற்றில் விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.
The death toll in Tuesday’s bus-auto rickshaw collision in Maharashtra’s Nashik district mounted to 26https://t.co/IWBDOyuT8I
— HTMumbai (@HTMumbai) January 29, 2020
இதுகுறித்த தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்து, ஆட்டோ ஆகியவற்றை நீண்ட நேரம் போராடி கிரேன் மூலம் அவர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பலி எண்ணிக்கை உயர கூடும் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.