ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
வீரியம் குறையாத கொரோனா! இந்தியாவில் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்தது.
கொடிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 25 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உலக அளவில் இறப்பு 170,000யை கடந்துள்ளது.
இந்த கொடிய நோய் இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் நேற்று வரை மொத்தம் 20080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு 645; குணமடைந்தவர்கள் 3975. சிகிச்சை பெற்று வருபவர்கள் 15460 பேர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 1537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 552 பேருக்கும் தமிழகத்தில் 76 பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.