மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்துக்குள்ளான இந்திய ராணுவ ஹெலிகாப்டர்; அருணாசல பிரதேசத்தில் மீட்பு பணிகள் தீவிரம்...!!
இந்திய ராணுவ ஹெலிகாப்டர், அருணாச்சலப் பிரதேசம், மண்டாலா பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலாவுக்கு மேற்கு பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் இன்று காலை 9:15 மணி அளவில் தொடர்பை இழந்தது.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஹெலிகாப்டரில் விமானி மற்றும் துணை விமான என இருவர் பயணித்ததாகவும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் என்றும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஹெலிகாப்டரில் இருந்த பைலட்டுகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.