மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Trending Video: "அந்த மனசும், துணிவும் தான் சார் கடவுள்" அந்தரத்தில் உயிருக்கு போராடிய காக்கைக்கு கைகொடுத்த காவல்துறை அதிகாரி..!
கயிற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை, தன் உயிரை பணயம் வைத்து போக்குவரத்து காவலர் மீட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ராஜாஜி நகர் போக்குவரத்து காவல்நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர் இன்று தனது பணியை மேற்கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கிருக்கும் பிரம்மாண்ட விளம்பர பதாகையின் கட்டமைப்பிற்குள், காகம் ஒன்று கால்களில் கயிறு மாட்டிக்கொண்டு பறக்க முடியாமல் தத்தளித்தது.
The hidden and unexplored side of a policemen. Well done Mr Suresh from @rajajinagartrps pic.twitter.com/D9XwJ60Npz
— Kuldeep Kumar R. Jain, IPS (@DCPTrWestBCP) December 30, 2022
மேலும், அந்த காகம் கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட காரணத்தால் பறக்க முடியவில்லை. இதனைக்கண்ட காவலர் சுரேஷ், சவால்கள் நிறைந்த கம்பியில் இலாவகமாக ஏறி காகத்தை விடுவித்தார்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. இதனை பெங்களூர் மேற்கு நகர கூடுதல் காவல் ஆணையர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.