திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
ட்ராபிக் ஜாமால் 3 % விவாகரத்து - அரசியல் பிரபலம் பகீர் பேட்டி.!

போக்குவரத்து நெரிசலால் மும்பை மாநகரில் 3 % விவாகரத்துகள் நடைபெறுவதாக அம்மாநில முன்னாள் முதல்வரின் மனைவி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் பேசுகையில், "நான் ஒரு சாதாரண குடிமகனாக சொல்கிறேன். வீட்டினை விட்டு வெளியே வந்தால், குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள், போக்குவரத்து நெரிசல் போன்று பல பிரச்சனைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்து, சாதாரண பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன்.
மும்பை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனை காரணமாக, பலரும் தங்கள் குடுமபத்துடன் போதிய நேரத்தை செலவிடுவது இல்லை. இதனால் 3 % விவாகரத்து நடக்கிறது. இந்த பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.