சொகுசு வாகனங்களை மிஞ்சிய எருமை மாடு .! விலை எவ்வளவு தெரியுமா.?



Dharma is the queen of buffaloes

ஹரியானாவை சேர்ந்த ஒரு விவசாயி வளர்த்து வரும் ஒரு எருமை மாட்டின் விலை ஒரு சொகுசு காரை விட அதிகமாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் அனைவரின் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Hariyaana

ஹரியானா மாநிலம் பிவானியில் இருக்கின்ற ஜூவி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தான் சஞ்சய். இவருக்கு சொந்தமாக ஒரு எருமை மாடு இருக்கிறது. இவர் அந்த எருமை மாட்டை மிகவும் கவனத்தோடு வளர்த்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதோடு இவர் இந்த எருமை எருமை மாட்டிற்கு தர்மா என்று பெயரிட்டுள்ளார். அந்த எருமை மாடு நாளொன்றுக்கு 15 லிட்டர் பால் வழங்குகிறது. ஹரியானாவிலிருக்கும் மக்கள் சொகுசு கார் வைத்திருப்பதை பெருமையாக நினைப்பார்கள். ஆனாலும் இந்த எருமை மாட்டின் விலை சொகுசு கார்களை விடவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த எருமை மாட்டின் விலை 46 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் குறைந்தபட்சம் 61 லட்சத்திற்கு இதை விற்பனை செய்வதாகவும் சஞ்சய் தெரிவித்திருக்கிறார்.

Hariyaana

அதோடு, அந்த எருமை மாட்டிற்கு ஒவ்வொரு நாளும் பசுந்தீவனம், 40 கிலோ கேரட், தானியங்கள் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல்,   உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பல்வேறு அழகு பட்டங்களையும் தர்மா பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த எருமை மாட்டை மருத்துவர் ஒருவர் இதன் அழகை பொறுத்தவரையில் இது எருமைகளின் ராணி என்று தெரிவித்துள்ளார்.