மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் கவுரவத்துடன் விளையாடுறாங்க! வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் மூழ்கிய நபர்!
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம்நகர் கிராமத்தில் வசித்து வருபவர் சுனில் கர்மாகர். இவர் சமீபத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யகோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அடையாள அட்டையை பெற்ற சுனில், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டையில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நாய் புகைப்படம் இருந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து சுனில் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யகோரி விண்ணப்பித்திருந்தேன். இந்நிலையில் என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்திற்கு பதிலாக நாய் புகைப்படம் இருந்தது. மேலும் அதில் அதிகாரியும் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால், அவரும் அந்த புகைப்படத்தை பார்க்கவில்லை. அதிகாரிகள் என்னுடைய கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்க உள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி கூறுகையில், தவறு நடந்திருந்தால், அது சரி செய்யப்படும். வாக்காளர் அடையாள அட்டையில் நாய் புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய விஷயம். ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும்போது, அதிகாரி ஒருவரால், தவறு நடந்துள்ளது. புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. விரைவில், திருத்தம் மேற்கொள்ளப்பட்ட புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.