திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
சர்க்கரை, சளி, கிருமித்தொற்று மாத்திரைகளில் 145 தரப்பரிசோதனையில் தோல்வி; மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு.!

145 மருந்துகள் தரமற்றுள்ளது என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து இருக்கிறது.
மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மருந்துகளின் தரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சளி, கிருமி தொற்று, சர்க்கரை நோய் மாத்திரைகளில் 145 தரமற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அப்பளமாக நொறுங்கிய கார்.. ஆன்மீக சுற்றுலாவில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்.!
வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் போலியான, தமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை தயாரித்து, விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆய்வில் உறுதி
கடந்த ஜனவரி மாதத்தில் 1000 மருந்துகள் ஆய்வுக்குட்பட்ட நிலையில், சளி, கிருமி, ஜீரண மண்டல பாதிப்பு, சர்க்கரை நோய், வைட்டமின் குறைபாடு அவற்றில் 145 தரமற்று, போலித்தன்மையுடன் இருப்பது தெரியவந்தது.
இந்த மண்துகள் இமாச்சல பிரதேசம், உத்திரகன்ட் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் விபரங்கள் cdsco.gov.in என்ற பக்கத்தில் இருக்கிறது. மருந்து, மாத்திரைகளை உபயோகம் செய்யும் நபர்கள் கவனத்துடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வக்பு வாரிய சட்டத்திருத்தம் மசோதா; 14 கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு.!