திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடுமையின் உச்சகட்டம்... பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ.!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களாக மிகப்பெரிய கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று போராடத் துவங்கினர். இதற்கு நாகா மற்றும் பிற பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு மிகப்பெரிய கலவரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு நடைபெற்று வரும் கலவரத்தின் போது மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோவில் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் இளைஞர்கள் அவரின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு இழுத்துச் செல்வது போன்ற கொடூரமான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. மேலும் அந்தப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
Thread🤬😭#ManipurCrisis #ManipurViolence #ManipurBurning #manipurriots #Manipur #terrorist बीच सड़क
— Babu Khan (@Abushahma02) July 19, 2023
The video of Kuki women being paraded naked and sexually assaulted by the Meitei mob in Manipur is extremely distressing. How can a country allow its women 2 b treated like this? pic.twitter.com/XcBl0S6wBP
கடந்த சில மாதங்களாகவே பழங்குடியின குழுக்களுக்கு இடையிலான மோதலால் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. இங்கு நடைபெற்று வரும் கலவரத்தில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டும் பொது சொத்துக்கள் சேத படுத்தப்பட்டு வருகிறது.