#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ஃபோன்: அரசு அதிரடி அறிவிப்பு..!
ராஜஸ்தான் மாநில அரசு, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி இந்த ஆண்டு பட்ஜெட்டில் அம் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. அந்த ஃபோங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இலவசமாக இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது.
இதற்கான திட்ட செலவு ரூ.12 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பாக, முதல்கட்டமாக குறிப்பிட்ட அளவில் ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளது.