மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மணிப்பூரில் பயங்கரம்... சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி எரித்துக் கொலை... 2 மாதங்களுக்குப் பின் வெளியான அதிர்ச்சி சம்பவம்.!
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் நாடையே கதி கலங்க செய்திருக்கிறது. இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 160க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி அவர்களின் அந்தரங்க உறுப்புகளை பாலியல் சீண்டல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் மனைவி எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான கராசந்த் சிங் என்பவரின் மனைவி இபேக்டோம்பி எரித்து படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
80 வயதான இந்த மூதாட்டியை கடந்த மே மாதம் 28ஆம் தேதி கலவர கும்பல் எரித்து கொலை செய்திருக்கிறது. ஆனால் இந்த செய்தி தற்போது தான் வெளியாகி நாட்டை அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் அவரது பேரன் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளார்.