மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண மேடையில் நடனமாடிய இளம்பெண்! கண்ணிமைக்கும் நொடியில் மர்மநபர் செய்த காரியம்! பகீர் வீடியோ இதோ!
உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில், நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது இரு இளம்பெண்கள் சேர்ந்து மேடையில் நடனமாடிகொண்டிருந்துள்ளனர்.
அப்போது ஒரு சில நிமிடங்கள் அந்த பெண் நடனமாடாமல் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்பொழுது கீழே மதுபோதையில் அமர்ந்திருந்த இருந்த சில நபர்கள் அவரை ஆட சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆடவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அருகிலிருந்த மற்றொரு நபர் சுட சொல்லி கத்தவும் அந்த நபர் அடுத்த நொடியே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பெண்ணின் தாடையில் குண்டு பாய்ந்தநிலையில், முகத்தில் காயமடைந்த அந்தப் பெண் சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவி செய்துள்ளனர். மேலும் அவரது மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு பெண்ணை சுட்டநபரை தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.