தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சுந்தர் பிச்சை எப்படி கூகுள் CEO ஆனார் தெரியுமா? வெளிவந்தது உண்மை ரகசியம்!
கூகுள். இன்றைய வளர்ந்துவரும் டெக்னாலஜி சம்பந்தமான அணைத்து முயற்சிகளுக்கும் முக்கியத்துவமா இருப்பது கூகுள். இந்த கூகுள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக இருப்பது நமது இந்தியாவை சேர்ந்த, அதுவம் நமது தமிழகத்தை சேர்ந்த திரு சுந்தர்பிச்சை அவர்கள்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது போல சுந்தரின் வெற்றியின் பின்னணியிலும் ஒரு பெண் இருக்கிறார். வறுமை இருந்தபோதும், செல்வம் வந்தபோதும், ஒரு நல்ல தோழியாய், காதலியாய், மனைவியாய் இருந்தவர்தான் அவரது மனைவி அஞ்சலி.
கல்லூரியில் படிக்கும்போதே இருவரும் காதலித்துள்ளார். சென்னையில் ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்த எளிமையான சுந்தரின் வீட்டில் TV கூட கிடையாது.
கல்லூரியில் படிக்கும்போது அஞ்சலியைப் பார்க்க அவரது ஹாஸ்டலுக்கு செல்லும்போது யாரோ கீழேயிருந்து சத்த்மாக குரல் கொடுப்பார்கள் ‘அஞ்சலி சுந்தர் வந்திருக்கிறார்’ என்று.
மொபைல் போனெல்லாம் இல்லத அந்த கால கட்டத்தில் இந்த சத்தத்தை கேட்க கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கும் சுந்தருக்கு.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது சுந்தருக்கு. அஞ்சலி இந்தியாவில், சுந்தர் அமெரிக்காவில்… இருவருக்கும் போன் பேசிக்கொள்ளும் அளவு வசதி கூட இல்லை.
ஆறு மாதங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களுக்குள் இருந்த காதல் உறுதியானதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.
சுந்தர் தனக்கு ஒரு வேலையைத் தேடிக் கொண்டபின் அஞ்சலியும் அமெரிக்கா புறப்பட்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரின் திருமணமும் இனிதே நடந்தேறியது. இந்த ஜோடியை அறிந்த அனைவருமே அஞ்சலி சுந்தரின் ’lucky charm’ என்று சொல்வார்கள்.
அஞ்சலி அவரது வாழ்க்கையில் வந்த நேரம், சுந்தருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் CEO பதவி தர முன் வந்தது.
ட்விட்டரும் யாஹூவும் கூட அவரைத் தொடர்பு கொண்டன. சுந்தருக்கு கூட கூகுளை விட்டு கிளம்பலாமா என்ற யோசனை வந்தது. அப்போது கூகுளை விட வேண்டாம் என்னும் ஆலோசனையை வழங்கியது அஞ்சலிதான்.
சுந்தர் தன் மனைவியின் ஆலோசனைக்கு செவி மடுக்க எடுத்த முடிவு, இன்று நாம் அவரை கூகுளின் CEOவாகப் பார்க்கிறோம் என்று கூறினால் மிகையாகாது.